அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பிற்காக சுமார் ரூ.110 கோடியை சிங்கப்பூர் அரசு செலவிட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் அணு ஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் என என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அறிவிப்பிற்கு ட்ரம்ப் வரவேற்பு அளித்தார். இதையடுத்து இருநாட்டு அதிபர்களும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகொரிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவை கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார். இதையடுத்து கிம் உடனான சந்திப்பை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் வடகொரியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கிம்மை சந்திப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார். சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த சந்திப்புக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் செய்தியாளார்களிடம் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ட்ரம்ப்-கிம் சந்திப்புநடைபெறும் உச்சி மாநாட்டிற்காக 110 கோடியை செலவிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் செலவு முழுவதையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.



