ஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை!? திமுக.,வினருக்கு பதில்!

Published:

governor banwarilal purohit - 2026

தமிழக அரசின் எந்தத் துறையையும் ஆளுநர் இதுவரை விமர்சனம் செய்தது இல்லை என்று ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

மக்கள் நலனுக்காக இது போன்ற ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆளுனரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது. அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநில அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் கடமையும் ஆளுனருக்கு உள்ளது என்று கூறியுள்ள ஆளுநர் ”அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் உள்ள எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என்று ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு  விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img