உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகளின் 21-ஆம் ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று நடைபெறுகிறது.
விழாவில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனிமனித முன்னேற்ற வேண்டி வேள்வி, நால்வர், அங்காளம்மன், சப்த கன்னிகள், முருகர் ஆகிய சுவாமி சிலைகளின் கண் திறப்பு, திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன.
விழாவுக்கு உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைமை சுவாமி ஜி ஸ்ரீ மத் அனந்தானந்தஜி மகராஜ் தலைமை வகிக்கிறார். பெரம்பலூர் அன்னை மகா டிரஸ்ட் ஸ்ரீராஜ்குமார் சுவாமிகள், உளுந்தூர்பேட்டை மிராசுதாரர் புஷ்பவள்ளி ராஜசேகரன், பாதூர் அகத்தீஸ்வரர் கோயில் பரம்பரை தர்ம கர்த்தா செல்லம்மாள் அருணாச்சல குருக்கள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி கலந்து கொண்டு அன்னதானத்தைத் தொடக்கி வைக்கிறார்.
விழாவை முன்னிட்டு அன்று காலை 6.45 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜையும், காலை 8.55 மணிக்கு சகல துன்பமும் விலக கலச பூஜை ஆகியவை நடைபெறும். காலை 10.15 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. முற்பகல் 12.05 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 3.15 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகளின் வீதியுலாவும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெறும்.



