பழனி கோயில்களில் இன்று தொடர் அன்னாபிஷேக விழா

பழனி கோயில்களில் உலகநலன், விவசாய செழுமை வேண்டி நடைபெறும் அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு நடைபெறுகிறது.

இதில் பழனி மலைக்கோயிலில் இன்று பழனி சித்தனாதன் சன்ஸ் சார்பில் 108 வலம்புரி சங்குகளை வைத்து சிறப்பு யாகமும் தொடர்ந்து மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு பல்வேறு வாசனை பொருள்களால் அபிஷேகம், பச்சைக்கற்பூரம், சுத்த அன்னம், வில்வம் கொண்டு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து நாளை கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து சார்பில் திருஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமிக்கும், நாளை மறுநாள் பெரியநாயகியம்மன் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.

நிறைவுநாள் நிகழ்ச்சியாக வரும் ஜூன் 29 ஸ்ரீகந்தவிலாஸ் விபூதி ஸ்டோர்ஸ் சார்பில் பெரிய ஆவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.