போலீஸே இப்படி திருடலாமா? எதைத் திருடி சஸ்பெண்ட் ஆர்டர் வாங்கினாங்க இந்த லேடீ போலீஸ் பாருங்க…!

Published:

chennai police woman - 2026
சென்னை பெண் போலீஸ் நந்தினி, எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதம்

போலீஸே திருடலாமா? ஆனால் எதைத் திருடி இந்த லேடீ போலீஸ் சஸ்பென்ஷன் ஆர்டர் வங்கியிருக்காங்க தெரியுமா? கேட்டால் நொந்து போவீங்க…! ஆமாம்… ஓடோமாஸ் திருடி சிக்கிக் கொண்டார் சென்னை பெண் போலீஸ். அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் காவல்துறை ஆணையர்!

வேப்பேரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் நந்தினி. இவர் எழும்பூரில் உள்ள நீல்கிரிஸ் கடைக்கு சென்றுள்ளார். அங்கு போன் பேசிக் கொண்டே நீண்ட நேரமாக சுற்றி வந்த நந்தினி இறுதியாக ஒரு பொருளை மட்டும் பில் போட கொடுத்துள்ளார். அப்போது அந்த பில் போடும் ஊழியர் உங்கள் பாக்கெட்டுகளில் வைத்துள்ள பொருட்களையும் எடுத்துத் தாருங்கள். பில் போட்டவுடன் எடுத்துச் செல்லுங்கள் என்றார்.

அதற்கு நந்தினி அப்படியெல்லாம் நான் எதையும் எடுக்கவில்லை என்றார். அந்த ஊழியரோ நீங்கள் பொருட்களை எடுத்து பாக்கெட்டுகளில் வைத்ததை சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்த்துவிட்டோம் என்றார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அப்படியும் நந்தினி பிடிவாதம் பிடித்தார். இதையடுத்து பெண் ஊழியர்களைக் கொண்டு நந்தினியை சோதனையிட்டனர். அதில் சாக்லேட்டுகள், ஓடோமாஸ் ஆகியவற்றை அவர் திருடி வைத்திருந்தார். இதையடுத்து இனி திருட மாட்டேன் என்று கடை ஊழியர்கள் நந்தினியிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

தகவலறிந்த நந்தினியின் கணவர் அடியாட்களுடன் வந்து கடையில் இருந்த ஊழியர்களைத் தாக்கினார். இதில் இருவர் படுகாயமடைந்தார். மேலும் பெண் காவலர் திருடிய வீடியோவும், அவரது கணவர் ஊழியர்களைத் தாக்கிய வீடியோவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதை அடுத்து நந்தினியை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திருடர்களை பிடிக்கும் போலீஸே இப்படித் திருடியது, அதுவும் சொற்ப விலை உள்ள பொருளைத் திருடியது சமூக வலைத்தளங்களில் சிரிப்பாய்ச் சிரிக்கிறது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img