திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரும் தொழிலதிபருமான சிவமூர்த்தி ஜூன் 25 அன்று மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விமல், மணிபாரதி, கவுதமன் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையில் சிவமூர்த்தியின் உடலை போலீசார் மீட்டனர். திருப்பூரில் கடந்த 25 ஆம் தேதி சிவமூர்த்தி மர்மநபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



