தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.
தடகள சாம்பியன்ஷிப் போட்டி: புதிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை
Popular Categories



