ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே வந்துள்ளது.
ஹராரேவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி, டி20 தரவரிசையில் முதல் இடத்திலிருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 8 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் நான்கு போட்டிகளில் 200+ ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி கடைசியாக இங்கிலாந்து தொடரில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது (5 ஒருநாள் மற்றும் ஒரு டி20). ஆனால் டி20 போட்டிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலியா சற்றே வலுவான அணியாக உள்ளது. அதற்கு சான்று அந்த அணி தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருப்பதே ஆகும் .
பாகிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் , ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் அந்த அணி தரவரிசையில் முன்னேறி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு செல்ல போராடும்.



