வேளாண் துறை உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு இன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் பணிக்கான உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 7 -இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் 3,241 பேர் பங்கேற்றனர். போட்டியாளர்கள்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 46 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு இன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



