எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இன்று மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருவள்ளூரில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், சென்னையிலிருந்து சேலத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கவுள்ள 8 வழி பசுமைச் சாலை தேலையில்லாதது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களிடம் கருத்து கேட்கும் செய்தியாளர்களை தாக்கியும் வருகின்றனர். இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 3-ஆம் தேதி சேலம் மாநகரில் பொதுச் செயலாளர் அப்துல் சமத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.



