தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஒருசில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது தவறு என்றும், குற்றங்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் போன்று அல்லாமல் தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சரியாக உள்ளது என்றும் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தங்களின் தற்காப்புக்காகவே காவல்துறையினர் என்கவுன்டர் நடத்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் 8 வழிச்சாலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 8 வழிச்சாலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது கமல்ஹாசனின் உரிமை என்றும், அதை எதிர் கொள்வதும் அரசின் உரிமை என்றும் கூறினார்



