சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்; இந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி குடும்பநலத்துறை சேவைக்காக 9 புதிய ஜீப் வாகனங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டானர்.



