அன்புமணிக்கு அடங்காதவன்; சுகாதாரத் துறைக்கு சுருண்டவன்! #தொடைநடுங்கிசர்கார்!

vijay twitter - 2026

அன்புமணி ராமதாஸ் நெருக்குதல் கொடுத்தும், பலர் வலியுறுத்தியும் பணிந்து போகாத சர்க்கார் விஜய், சுகாதாரத் துறையின் கட்டளைக்கு சுருண்டு, சுருட்டு பிடிப்பதை நீக்கிக் கொண்டார்!

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்து தயாராகி வரும் படம் சர்கார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.

இதில், விஜய் புகை பிடித்தபடி காட்சி இருந்தது. இது, பெரும் விமர்சனங்களைக் கிளப்பி விட்டது. புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறிய விஜய், இப்போது அதை மீறி விட்டார் என்றும், தனது பேச்சுக்கு தானே துரோகம் செய்துவிட்டார் என்றும் பா.ம.க., அன்புமணி கூறினார். தொடர்ந்து பாமக., நிறுவுனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சர்கார் பட போஸ்டரில் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ்ம் சன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்ட பூர்வ நடிவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. மேலும் புகைப் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சினிமா துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.  

அன்புமணிக்கு அடங்காத படக்குழு, சுகாதாரத் துறை நோட்டீஸுக்கு அடிபணிந்தது. இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடித்த சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜய்யும் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தை மாற்றி விட்டுள்ளார். இதை அடுத்து என்ற டிவிட்டர் ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆகி, டிவிட்டர் வாசிகளிடையே பாப்புலராகி வருகிறது.

1 COMMENT

  1. அன்புமணிக்கு அடங்கவில்லை என்பது பெரிய விஷயமில்லை. அவர் சொல்லுக்கான செல்வாக்கு அவ்வளவே என்பதையே அது காட்டுகிறது.

    ஆனால் அரசு உத்தரவை மீறிச்செயல்பட பொதுவாக யாரும் குறிப்பாக சினிமாக்காரர்கள் துணியமாட்டார்கள். அரசு சொல்படி சம்பந்தபட்ட திரைப்பட இயக்குநர் செயல்பட்டதை விமர்சிப்பது தேவையற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories