புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
குப்பை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி கூடியது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்று அறிவித்து கூட்டப்பட்ட அந்தக் கூட்டம், பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தராததால் ஜூன் 4 மற்றும் 5 என இரு தினங்களும் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து பேரவை காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அனுமதி பெற்றார். ஆனாலும், சபாநாயகர் மற்றும் சில அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுவிட்டதால் அப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடந்த 2ம் தேதி காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது நடைபெற்று வருகிறது.



