நீட் நுழைவு தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு உருவாக்க பட உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்தில் நீட்தேர்வுக்கு எதிரான இயக்கத்தை திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்றும் குறிப்பிட்டார்.



