பாமக 30-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக பாமக தலைமை சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், பாமக 30-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. ராமதாஸ் பங்கேற்று கட்சிக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை சென்னை அடையாறு எல்.பி.சாலை தொலைபேசி இணைப்பகம் அருகில் 30-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



