பிரான்ஸ் அணி வீரரான என் கோலோ காண்டே உலகக்கோப்பையை தொடமால், வீரர்களுக்கு பின்னால் இருந்ததைக் கண்ட சக வீரர் அவரை பிடித்து அழைத்து வந்து உலகக்கோப்பையை அவரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் குரேஷியா அணியை பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் பிரான்ஸ் வீரர்கள் அனைவரும் கொட்டும் மழையில் உலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டு வித விதமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் உலகக்கோப்பையை வாங்கிய பின்பு அந்தணி வீரரான என் கோலோ காண்டே உலகக்கோப்பையை தொடாமல் சக வீரர்களுக்கு பின்னால் நின்றுள்ளார்.
உடனடியாக இதைக் கண்ட பிரான்ஸ் அணியின் மிட் பில்டர் உடனடியாக உலகக்கோப்பை கையில் வைத்திருந்த மற்றொரு பிரான்ஸ் வீரரிடம் இடமிருந்து வாங்கி, என் கோலோ காண்டேவிடம் கொடுத்தார்.
ஒரு மனிதனுக்கு கூச்ச சுபாவம் இருக்கலாம், மிகவும் அமைதியாக இருக்கலாம், ஆனால் உலகக்கோப்பை வென்ற தருணத்தில் கூட அதை பிடித்து கொண்டாடாமல் வீரர்களுக்கு பின்னால் நின்றிருந்த என் கோலோ காண்டேயின் பண்பைக் கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.




