குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைந்தையடுத்து, இன்று காலை குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வந்ததால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழையக்குற்றாலம், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்ததால், மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வெளியூரில் இருந்து குற்றாலம் வந்துள்ள சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
இதே போல ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தையடுத்து சுற்றுலா பயணிகள் 2 நாட்களுக்கு பின்னர் இன்று காலை அனுமதிக்கப்பட்டனர்.



