சேலத்தின் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருக்க வேண்டாம் என ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோ மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும். இதுகுறித்த மேலும் தகவல்களை பெற கட்டமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.



