December 5, 2025, 8:34 PM
26.7 C
Chennai

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் பிடித்த கடிதத்தை முதல்வரிடம் காட்டிய அமைச்சர்

21 July23 tourist - 2025மத்திய சுற்றுலாத்துறை 2017-ஆம் ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து வழங்கிய கடிதத்தினை, முதலமைச்சர் பழனிசாமியிடம் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மத்திய சுற்றுலா வளர்ச்சித் துறை புள்ளிவிவரப்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ல் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு நம் நாட்டின் கடற்கரைகள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் கலாச்சாரம் முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதையொட்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை மத்திய சுற்றுலாத் துறை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் 3 ஆண்டு புள்ளிவிவர அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் 2014-ல் சுமார் 46.57 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 43.89 லட்சம் பயணிகளுடன் மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் 2012-ல் 35.61 லட்சம், 2013-ல் 39.90 லட்சம், 2014-ல் 46.57 லட்சம் என சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாட்டினரின் மனம் கவர்ந்த இடங்களாக தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மகாபலிபுரம் கடற்கரை கோயில் மற்றும் சிற்பங்கள், ராமேஸ்வரம் கோயில், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, மருதமலை கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில், நீலகிரி மலை, கொடைக்கானல் ஏரி, சென்னையில் கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், சாந்தோம், புனித தோமையர் தேவாலயங்கள் ஆகியவை உள்ளன.

நாட்டின் தலைநகரான டெல்லிக்கு 2012-ல் 23.45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது 2013-ல் 23.01 லட்சம், 2014-ல் 23.19 லட்சம் ஆக உள்ளது. டெல்லியில் 2012-ஐ விட அடுத்த 2 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு டெல்லியில் வெளிநாட்டு பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளானதே காரணமாகக் கருதப்படுகிறது.

வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த இடமாகக் கருதப்படும் கோவா, முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. என்றாலும் 2012-ல் 4.50 லட்சம், 2013-ல் 4.92 லட்சம், 2014-ல் 5.13 லட்சம் என இங்கு வெளிநாட்டவர் வருகை அதிகரித்துள்ளது.

மிசோராம் மாநிலத்துக்கு வெளிநாட்டினர் வருகை 2012-ல் 744, 2013-ல் 800, 2014-ல் 836 என குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. இதைவிடக் குறைவாக லட்சத்தீவுக்கு 2012-ல் 580, 2013-ல் 371, 2014-ல் 514 பேர் வருகை புரிந்துள்ளனர்.

2014-ல் முந்தைய ஆண்டைக் காட்டிலும் வருகை குறைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாக ஆந்திரா, டையூ-டாமன், இமாச்சலப் பிரதேசம், சண்டீகர், கர்நாடகா ஆகியவை உள்ளன.

தேசிய அளவிலான புள்ளிவிவரப்படி, 2012-ல் நம் நாட்டுக்கு 1.82 கோடி பேர் சுற்றுலா வந்துள்ளனர். இது 2013-ல் 1.19 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2014-ல் 2.25 கோடியாக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு பயணிகளால் இந்தியாவுக்கு கிடைத்த வெளிநாட்டு பணம் 2012, 2013 மற்றும் 2014-ல் முறையே ரூ. 94,487 கோடி, ரூ.1,07,671 கோடி, ரூ. 1,23,320 கோடி ஆக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories