வரி செலுத்துவோரின் பணம் 4 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து மத்திய அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காகச் செலவு செய்ய எந்தவித உரிமையும் இல்லை என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு அளித்த பேட்டியில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே காட்டமாத் தெரிவித்தள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, வரிசெலுத்துவோரின் பணம் ரூ.4 ஆயிரம் கோடியை செலவு செய்திருக்கிறது. மக்கள் அரசிடம் இருந்து எந்தவிதமான பணத்தையும் பெறவில்லை, மாறாக மக்களின் பணத்தை எடுத்து விளம்பரத்துக்காக அரசு செலவு செய்கிறது. மக்களின் பணத்தை எடுத்து அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள எந்தவிதமான உரிமையும் இல்லை. மக்களின் பணம், மக்களின் நலனுக்காகவே செலவு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.



