சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் சாதனையை, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் சமன் செய்துள்ளார். செயிண்ட் கிட்ஸில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், கிறிஸ் கெய்ல் ஐந்து சிக்சர்களை விளாசினார். மொத்தம் 443 சர்வதேச போட்டிகளில் கிறிஸ் கேய்ல் 476 சிக்சர்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடியும் 476 சிக்சர்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் அப்ரிடியின் சாதனையை கெய்ல் சமன் செய்தார். அப்ரிடியை விட கெய்ல் 81 போட்டிகள் குறைவாக ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 1-ம் தேதி நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அப்ரிடியின் சாதனையை கெய்ல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இந்திய வீரர் தோனி 342 சிக்ஸர்கள் அடித்து 5-வது இடத்தில் உள்ளார்.



