தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் 5ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருணாநிதி குறித்து இணையத்தில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் `கலைஞர்’ என்ற சொல் இந்தியாவுக்குப் பின் அதிகம் தேடப்பட்டது. கருணாநிதி என்ற பெயரை மட்டும் 58 நாடுகளில் தேடியுள்ளனர் என்று கூகுள் தேடுபொறி தகவல் தெரிவிக்கின்றது.




