ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சற்றுமுன் தமிழகம்

13 Aug 05 ervadi santhana koodu 2018 - 2026ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 18-ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர் ஏர்வாடி. இந்த ஊரில் பாதுஷா நாயகம் தர்ஹா அமைந்துள்ளது. உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கியிருந்து, நாள்தோறும் தர்ஹாவில் வழிபாடு செய்வதன் மூலம் குணமடைந்து வருவதாக நம்பிக்கை உள்ளது.

இதனடிப்படையில், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த நோயளிகள் இங்கு தங்கியுள்ளனர். இது தவிர நாள் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், வழிபாடு செய்யவும் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து அதிகப்படியான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா, இன்று தொடங்க உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.