சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை குறித்தும், தொண்டர்கள் இறுதி வணக்கம் செலுத்த வேண்டிய வழி குறித்தும் திமுக., சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் – தமிழினத் தலைவருமான கலைஞர் அவர்களின் புகழுடல் தாங்கிய இறுதி ஊர்வலம் இன்று (8.8.2018) மாலை 4.00 மணி அளவில் ராஜாஜி ஹாலிலிருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக, தந்தை பெரியார் சிலையை கடந்து, பேரறிஞர் அண்ணா சிலை
வந்தடைந்து, அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
கழக உடன்பிறப்புகளும் – பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதி காத்து, தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.




