திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று முதல் குறிஞ்சி விழா தொடங்குகிறது. இவ்விழாவில் குறிஞ்சி மலர் புகைப்படக் கண்காட்சி, மலர் வழிபாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
நீலகிரி, கொடைக்கானல், மூணாறு மலைப்பகுதிகளில், 12 ஆண்டுக்கு ஒரு முறை, குறிஞ்சி பூக்கள் அதிகம் பூக்கின்றன. 2006ம் ஆண்டுக்குப் பின், தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நீல வண்ணத்தில் பூத்துக்குலுங்குகின்றன.
இந்த நீலக்குறிஞ்சி பூக்களின் சிறப்புகளை விளக்கும் வகையில், ஒரு மாதம் குறிஞ்சி விழா நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பான திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் தெரிவிக்கையில், இவ்விழாவை யொட்டி பிரையன்ட் பூங்காவில் புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். குறிஞ்சி பூக்கள் குறித்த விளக்க கையேடு, வாகனங்களில் ஒட்டும் ஸ்டிக்கர் ஆகியவை சுற்றுலாபயணியருக்கு வழங்கப்படும் என்றார்.



