பிரிட்டனில் உள்ளூர் கால்பந்து அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின்போது ரசிகர் ஒருவர், கப்பை தூக்கி எறிந்து நடுவரின் மண்டையை உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ளூர் கால்பந்து அணிகளான ஸ்டூம் க்ராஸ் மற்றும் ஏ.இ.கே. லர்னாகா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ட்ரோம் கிராஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மோசமாக தோல்வியடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர் கப்பை மைதானத்திற்குள் தூக்கி எறிந்துள்ளார். வேகமாக வந்த கப், எல்லைக்கோட்டில் உதவி நடுவராக பணியாற்றி கொண்டிருந்த, சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஃப்ரெட்ரிக் கிளைவர்
தலையின் மீது பலமாக தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த நடுவரின் தலையில் இருந்து ரத்தம் வேகமாக வெளியேற, மைதானத்திலே அவர் சுருண்டு விழுந்தார்.
இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழு, அவருக்கு சிகிச்சை அளித்து தலையை சுற்றிலும் ஒரு பெரிய கட்டு போட்டு அழைத்து சென்றனர்.



