கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு திருமணமா?

Published:

06 Aug10 Hardik pandya - 2026

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக உள்ள ஹர்திக் பாண்ட்யா நடிகை இஷா குப்தாவின் காதல் வலையில் விழுந்துள்ளதகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

சமீப காலமாக ஹர்திக் பாண்ட்யா இந்தி நடிகை பரினீதி சோப்ராவை காதலிப்பதாக பல கிசுகிசுக்கள் வந்தநிலையில் அதை இருவருமே மறுத்தார்கள்.

அதன்பின் இந்தி பட உலகில் பிரபல கதாநாயகியாக இருக்கும் எல்லி அவ்ரமை காதலித்தார், அந்த காதலும் இறுதியில் முறிந்தது.

இப்போது இந்தி நடிகை இஷா குப்தாவை காதலிக்கிறார் என்றும் இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றது.

பெயரை குறிப்பிடாமல் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று இஷா குப்தா அறிவித்து உள்ளார், ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related articles

Recent articles

spot_img