
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். லட்சக் கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்பலத்துக்கு பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில், இன்று கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் ,அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருணாநிதியின் சமாதிக்கு நடிகர் விஜய் அஞ்சலி
Popular Categories



