காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா செல்கிறார். இதுகுறித்து மாநில காங்கிரசார் கூறுகையில் வரும் 2019-ல் நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்று முதல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று துவங்கும் சுற்றுப்பயணத்தின் போது பொது கூட்டங்கள், அல்லது பேரணிகளுக்கு போவதற்கு பதிலாக குழுக்களை தேர்வு செய்வதில் கவனம் கொள்கிறது. மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகாரம்அளிக்கப்பட்டதும் தற்போதைய அரசில் அவர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும் ஒப்பிட்டு பார்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




