திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு வெற்றிபெறும் என அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை அசோக்நகரில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.




