அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமிக்கு ஆக.27ம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.சின்னசாமியை சிறைக்கு அனுப்ப சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்த போது 8 கோடி ரூபாய் கையாடல் செய்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சின்னசாமியை கைது செய்தனர். கோவை, சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக சின்னசாமி இருந்தவர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக, அண்ணா தொழிற்சங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், சின்னசாமியை, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




