கேரளாவில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் மிகக் கடுமையாக இருப்பதாக அதிர்ச்சி தெரிவித்த அவர், நிவாரண நிதியாக 100 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக வழங்கும் என உறுதி அளித்தார். ஒருவாரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் இதுவரை 5,000 கோடி ரூபாக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நாளை மறுதினம் வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Popular Categories




