தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவின் போது அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பின்னால், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்க பட்டிருந்ததாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அதிருப்தி அடைந்துள்ளார். நீதிபதிகளின் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் விடுத்த கோரிக்கையையும் ஆளுநர் மாளிகை நிராகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை
Popular Categories



