சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பம், ஆறு இந்திய முறை, அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆக., 14ல் இருந்து, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இன்று மாலை, 5:30 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோதி இயக்குனரகம் அறிவித்துள்ளது.



