கரூர்: சந்திரனில் முதன் முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் சந்திராயன் தான். இதன் பின்னர் சர்வதேச அளவில் சந்திரனில் ஆய்வு முக்கியத்துவம் பெற்றது.
ஏற்கனவே அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகள் இருந்தபோதும் இப்போது அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. என்று கூறினார் மயில்சாமி அண்ணாதுரை.
கரூரில் நடைபெற்ற நிலாவில் உலா என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டம் பற்றி கேட்டபோது, அது சாத்தியமான ஒன்றுதான். விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆய்வு மையத்தின் ஆயுள் காலம் முடிவடைய உள்ளதால், நிரந்தரமாக இயற்கையாகவே ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான திட்டம் இன்னும் பத்தாண்டுகளில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.




