டெஸ்ட் கிரிக்கெட் : அலஸ்டர் குக் 147, ஜோ ரூட் 125 ரன் விளாசல்: இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு

01 Sep11 india england - 2026

இந்திய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், தொடக்க வீரர் அலஸ்டர் குக் – கேப்டன் ஜோ ரூட் ஜோடியின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 292 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஜடேஜா 86* ரன், அறிமுக வீரர் விஹாரி 56, கேப்டன் கோஹ்லி 49, புஜாரா, ராகுல் தலா 37  ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா 2, பிராடு, கரன், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 40 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்திருந்தது. குக் 46 ரன், கேப்டன் ஜோ ரூட் 29 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். அபாரமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர்.

இந்த டெஸ்டுடன் ஓய்வு பெறும் அலஸ்டர் குக், சிறப்பாக விளையாடி சதம் அடித்ததன் மூலமாக பல சாதனைகளை வசப்படுத்தினார். அவர் சதத்தை நிறைவு செய்ததும் ஓவல் அரங்கில் இருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். குக் – ரூட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 259 ரன் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு வலுவான முன்னிலையை கொடுத்தனர். ஜோ ரூட் 125 ரன் (190 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), குக் 147 ரன் (286 பந்து, 14 பவுண்டரி) விளாசி ஹனுமா விஹாரி வீசிய 95வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

அடுத்து வந்த பேர்ஸ்டோ 18 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டானார். ஜோஸ் பட்லர் 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ஜடேஜா சுழலில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். தேனீர் இடைவேளையின்போது இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 105 ஓவ்அரில் 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 13, சாம் கரன் 7 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி 400 ரன்னுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 2வது இன்னிங்சில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துவிட்ட நிலையில், ஓவல் டெஸ்டில் ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

தற்போது தோல்வியை தவிர்த்து டிரா செய்தாலே போதும் என்ற அளவுக்கு இக்கட்டான நிலையில் இந்திய அணி சிக்கியுள்ளது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
தேனீர் இடைவேளைக்குப் பிறகு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. ஸ்டோக்ஸ் 37 ரன் எடுத்து (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஜடேஜா சுழலில் ராகுல் வசம் பிடிபட்டார். சாம் கரன் 21 ரன் எடுத்து விஹாரி சுழலில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடில் ரஷித் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்திய பந்துவீச்சில் ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா தலா 3, முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி 464 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

* ஒரு டெஸ்ட் போட்டியின் 3வது இன்னிங்சில் சதம் விளாசியவர்கள் பட்டியலில், குக் அதிகபட்சமாக 13 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
* ஒரு அணியின் 2வது இன்னிங்சில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் குக் 15 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். இலங்கையின் குமார் சங்கக்கரா (14 சதம்) 2வது இடத்தில் உள்ளார்.
* இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் குக் (7 சதம்) வசமாகி உள்ளது. கெவின் பீட்டர்சன் 6 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
* இந்திய அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (2555 ரன்) முதலிடம் வகிக்கிறார். இந்த பட்டியலில் குக் 2362 ரன்களுடன் 2வது இடம் பிடித்துள்ளார்.
* டெஸ்ட் போட்டியில் குக் சக வீரர்களுடன் இணைந்து 77 முறை ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்துள்ளார்.

அறிமுக டெஸ்டிலும் கடைசி டெஸ்டிலும் சதம்!

2006ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் அறிமுகமான அலஸ்டர் நாதன் குக், முதல் இன்னிங்சில் 60 ரன் மற்றும் 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 104 ரன் விளாசினார்.
தற்போது இந்திய அணியுடன் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள கு, முதல் இன்னிங்சில் 71 ரன், 2வது இன்னிங்சில் 147 ரன் விளாசி சாதனை படைத்துள்ளார்.
அறிமுக டெஸ்ட் மற்றும் ஓய்வு பெறும் டெஸ்டில் சதம் அடித்த 5வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
இதற்கு முன் ரெக்கி டப் (1902-1905), பில் பான்ஸ்போர்டு (1924-1934), கிரெக் சேப்பல் (1970-1984), முகமது அசாருதீன் (1984-2000) ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

டெஸ்ட் ரன் குவிப்பில் 5வது இடம்

தனது 160வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அலஸ்டர் குக் (33 வயது), 289 இன்னிங்சில் 12472 ரன் குவித்து (அதிகம் 294, சராசரி 45.35, சதம் 33, அரை சதம் 57) டெஸ்ட் ரன் குவிப்பில் 5வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கராவை (12,400) அவர் நேற்று முந்தினார்.
இந்த வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். ஆஸி. வீரர் ரிக்கி பான்டிங் (13,378), தென் ஆப்ரிக்காவின் ஜாக் காலிஸ் (13,289), இந்திய வீரர் ராகுல் டிராவிட் (13,288) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories