குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை! மீட்பு பணிகளுக்கு பாராட்டு

டெல்லி

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், கன மழை கொட்டித் தீர்க்கிறது. மனித உயிர்களும், கட்டுமானங்களும் இழப்பை சந்தித்துள்ளது என்பதை அறிந்து, கவலையடைந்துள்ளேன் என, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், கன மழை காரணமாக, மனித உயிர்களும், கட்டுமானங்களும் இழப்பை சந்தித்துள்ளது என்பதை அறிந்து, கவலையடைந்துள்ளேன். மாநில அரசும், அனைத்து துறைகளும் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு வீச்சில் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசும், தேசிய பேரிடர் மீட்பு படையும், குடிமை சமூக அமைப்புகளும் மேற்கொண்டுவரும் நிவாரண பணிகளை பாராட்டுகிறேன்.” இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.