ஆக்ஸிடென்ட் ஆனவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
Muhammad
Muhammad

சாலை விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த நபரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியிருக்கிறது.

சிங்கப்பூரில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முகமது ஃபிட்ரி என்பவர் மீது வேன் ஒன்று மோதியது.

நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அவர் மயக்கமடைந்தார். அப்போது முகமது ஃபிட்ரியின் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்சில் இருந்து அவசர உதவி எண்ணிற்கு தகவல் சென்றுள்ளது. மேலும் அவர் இருக்கும் இடத்தின் லொகேஷனையும் அனுப்பியுள்ளது. இதையடுத்து அவர் விபத்து நடந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

apple watch
apple watch

ஆப்பிள் வாட்சில் ஆபத்து காலங்களில் அவசர உதவிப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் SOS வசதி உள்ளது. இதிலுள்ள பொத்தானை அமுக்குவதன் மூலமாகவும் அல்லது சில நேரங்களில் அதிர்வுகளால் தூண்டப்பட்டு அவசர உதவி எண்களுக்கு தகவலும், லொகேஷனையும் அனுப்பி வைக்கும் வசதி இந்த வாட்சில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.