இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வகை எல்பிஜி சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது காம்போசிட் சிலிண்டர் (Composite Cylinder) என்று அழைக்கப்படுகிறது. இது லைட் வெயிட் மற்றும் துருப்பிடிக்காத தன்மை உள்ளிட்ட பல நன்மைகளை இந்த காம்போசிட் சிலிண்டர் கொண்டுள்ளது.
மேலும் இந்த காம்போசிட் சிலிண்டரின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் எவ்வளவு எரிவாயு உள்ளது மற்றும் எவ்வளவு எரிவாயு செலவாகி உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.
காம்போசிட் சிலிண்டரானது தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டீல் சிலிண்டர்களை விட பல நன்மைகளை கொண்டுள்ளன. இந்த காம்போசிட் சிலிண்டர் மூன்று லெவல்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது,
முதலில் உள்ளே ப்ளோ-மோல்டட் ஹை-டென்சிட்டி பாலிஎதிலீன் (HDPE) அடுக்கு உள்ளது. அடுத்து இதன் இன்னர் லேயர் பாலிமர்ஸால் செய்யப்பட்ட ஃபைபர்கிளாஸ் கோட்டிங்கை கொண்டுள்ளது. மூன்றாவதாக எக்ஸ்டர்னல் லெவல் HDPE (High-Density Polyethylene)-ஆல் அவுட்டர் ஜாக்கெட்டால் உருவாக்கப்பட்டது.
இந்த வகை சிலிண்டர்கள் வழக்கமான ஸ்டீல் சிலிண்டர்களின் எடையில் பாதி எடையை கொண்டு பல அம்சங்களை கொண்டுள்ளது.
காம்போசிட் சிலிண்டர்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையில் பயன்பாட்டிற்கு கிடைகின்றன. மேலும் இந்த சிலிண்டர் ட்ரான்ஸ்பரென்ட்டானது என்பதால் இது சிலிண்டரில் எஞ்சியிருக்கும் எரிவாயுவின் அளவு எவ்வளவு என்பதை வாடிகையாளர்கள் சரி பார்க்க உதவுகிறது.
இந்த முக்கிய அம்சம் எரிவாயு அளவை சரிபார்த்து சிலிண்டர் தீரும் நிலையில் இருந்தால், அடுத்து மீண்டும் எரிவாயுவை சரியான நேரத்தில் நிரப்ப திட்டமிட நுகர்வோருக்கு உதவும்.
மேலும் இந்த கம்போசிட் சிலிண்டர் துருபிடிக்காது. குறிப்பாக எளிதில் சேதம் முடியாத அளவிற்கு உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே முற்றிலும் பாதுகாப்பானது. தவிர இந்த சிலிண்டர் மாடர்ன் கிச்சன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த காம்போசிட் சிலிண்டர்கள் அகமதாபாத், அஜ்மீர், அலகாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், டார்ஜிலிங், தில்லி, ஃபரிதாபாத், குருகிராம், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜலந்தர், ஜாம்ஷெட்பூர், லூதியானா, மைசூர், பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, சங்ரூர், சூரத், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், தும்கூர், வாரணாசி மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட நாட்டின் 28 நகரங்களில் கிடைக்கின்றன.
விரைவில் நாட்டின் பிற நகரங்களில் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த காம்போசிட் சிலிண்டரைப் பெற கேஸ் ஏஜென்சியில் குறிப்பிட்ட அளவு டெபாசிட் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். 10 கிலோ எடை கொண்ட எல்பிஜி காம்போசிட் சிலிண்டருக்கு ரூ.3,350, 5 கிலோ எடை கொண்ட காம்போசிட் சிலிண்டருக்கு ரூ. 2,150 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.
இந்த புதிய சிலிண்டரை பெற விரும்புவோர் தங்களது பழைய ஸ்டீல் சிலிண்டரை ரிட்டர்ன் கொடுத்து விட்டு பெறலாம். நீங்கள் இன்டேன் கஸ்டமராக இருந்தால் உங்கள் எரிவாயு இணைப்பிற்கான சந்தா காகிதத்தை எடுத்து செல்ல வேண்டும்.
புதிய சிலிண்டருக்கான டெபாசிட் தொகை , நீங்கள் முன்பே செலுத்தி இருக்கும் டெபாசிட் தொகையில் கழிக்கப்பட்டு மீதமுள்ள பிணத்தை கட்டும்படி இருக்கும். நீங்கள் முன்பே Indane-க்கு ரூ.2000 டெபாசிட் செலுத்தியிருந்தால், 10 கிலோ கம்போசிட் சிலிண்டருக்கு நீங்கள் ரூ.1,350 மட்டுமே செலுத்தினால் போதும்.