தில்லியில் உள்ள பாட்னா ரோல் சென்டர் என்ற உணவு நிறுவனம் தற்போது ஸ்பெஷல் காத்தி ரோல் என்ற உணவை தயாரித்துள்ளது.
காத்தி ரோல் என்றால் சாப்பாத்தியை தயாரித்து அதற்குள் சாஸ், கீரீம் உடன் விதவிதமான ஸ்டஃப்களை வைத்து சுருட்டி வழங்குவது தான் காத்தி ரோல்.
இதை மிகப்பெரிய அளவில் சுமார் 10 கிலோ எடையுடன் தயாரித்து உணவு போட்டி நடத்துகிறார் சாலையோர கடைக்காரர்.
ஸ்பெஷல் 10 கிலோ காத்தி ரோலை 20 நிமிடங்களில் முழுமையாக சாப்பிடுபவர்களுக்கு பாட்னா ரோல் சென்டர் நிறுவனம் ரூ20 ஆயிரம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த 10 கிலோ ஸ்பெஷல் காத்தி ரோலில் பெரிய சப்பாத்தி செய்தி அதில் 30 முட்டைகள், காரமான சாஸ், நூடுல்ஸ், கெபாப்ஸ், சோயா சாப் ஆகியவற்றை வைத்து தயாரிக்கின்றனர்.
இதன் தயாரிப்பு செலவே ரூ3 முதல் ரூ4 ஆயிரம் செலவாகும். ஃபுட் கல்ட் இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.