சென்னை: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை சிலர் ஆதரிக்க, பலர் எதிர்க்க விவாதம் களை கட்டியுள்ளது. இதில், ஊடகங்களும் தங்கள் சார்பு நிலைக்கு ஏற்றவாறு பிரபலங்களின் கருத்துகளைப் பெற்று வெளியிட்டு வருகின்றன.
நடிகை கஸ்தூரியும் சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தனது கருத்தை கூறியுள்ளார். இருப்பினும் அவரது கருத்தை கேட்ட ஒரு தனியார் ஊடகம் பெண்களின் உடை குறித்தும் வரைமுறைகள் வகுக்க வேண்டும். மற்ற ஐயப்பன் கோயில்களுக்குச் செல்வது போல, புடவை, சல்வார் கமீஸ், பேண்ட் – சட்டை அணிந்து வரவும் அனுமதிக்க வேண்டும்” என்று கஸ்தூரி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ந்த கஸ்தூரி, மறுப்பு வெளியிட்டு டிவிட்டியுள்ளார்.
பெண்கள் செல்வதால் தவறில்லை என தான் நான் சொன்னேன் சல்வார் கமீஸ் போன்ற உடை குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. அதை திரித்து அந்த நிறுவனம் வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
கஸ்தூரியின் இந்த டிவிட்…
கேரள கோயில்களில் பெண்கள் இந்திய உடைகளான சேலையிலும் சூரிதாரிலும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையே சபரிமலையிலும் கடைபிடிக்க வாய்ப்புண்டு என்றே என் கருத்தை பகிர்ந்துகொண்டேன். இதில் தேவையற்ற விஷமங்களை புகுத்த வேண்டாம் என்று நமது கலாச்சார காவலர்களை கேட்டுக்கொள்கிறேன். #Sabarimala
— Kasturi Shankar (@KasthuriShankar) September 28, 2018




