சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் திடுக் தகவல்!

Published:

sirisena - 2026

“சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேன கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள மைத்ரீபால சிறீசேன, அங்கு வாழும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், கடந்த 2009ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது என்று குறிப்பிட்டார். மேலும், அமைச்சர்களின் வீடுகளையும், அமைச்சர்களையும் குறிவைத்து தாக்க உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களை நாட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்ததாக மைத்ரீபால சிறீசேன கூறினார்.

விடுதலைப் புலிகளின் வான்வெளித் தாக்குதலுக்கு அஞ்சியே முன்னாள் அதிபர் ராஜபட்ச, முன்னாள் பிரதமர், ராணுவத் தளபதி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி இருந்தனர். அந் நிலையில் இறுதிப் போரை முடித்து வைத்தது தான்தான் என மைத்ரீபால சிறீசேன பேசியது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img