தலைநகர் தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெட்ரோல் வாகனங்களுக்கும் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. பெருகி வரும் வாகனங்களால் காற்று மாசடைந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தில்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபட முக்கியக் காரணியாக இருப்பவை வாகனங்கள். காற்று மாசு படுவதைத் தடுக்க வெளிநாடுகள் சிலவற்றில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அதுபோல், தில்லியிலும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் டீசல் வாகனங்களின் போக்குவரத்திற்கும்,15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் வாகனங்கள் இயங்கவும் தடை விதித்துள்ளது. மேலும், அதுபோன்ற வாகனங்களின் பதிவுத் தகவல்களை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது,
10 ஆண்டு பழைமையான டீசல் வாகனங்களுக்கு தில்லியில் தடை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari