அதிமுக அரசுக்கு இன்றும், நாளையும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஆ.இராசா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:மக்கள் நலன் மறந்து கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் என தமிழகத்தில் ஊழல்ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டுமென தலைமைக் கழகம் முடிவு எடுத்துள்ளது.இதையொட்டி வருகிற இன்றும், நாளையும் சொற்பொழிவாளர்களைக் கொண்டு “கண்டனப் பொதுக்கூட்டங்களை”, அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளின் துணையுடன் எழுச்சியோடு நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சென்னை பூந்தமல்லி- பொருளாளர் துரைமுருகன், திருத்தணி- முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கடையநல்லூர்-துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, எம்.எல்.ஏ. குளித்தலை-துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வாலாஜாபாத்-துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, வேலூர் – ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மதுரை-திருச்சி சிவா, எம்.பி., ஒட்டன்சத்திரம்- ஆ.இராசா, செஞ்சி – டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., திருச்சி- க.பொன்முடி, எம்.எல்.ஏ., காங்கயம்- எ.வ.வேலு, எம்.எல்.ஏ. அண்ணா நகர் – தயாநிதி மாறன், அம்பத்தூர்-வாகை சந்திரசேகர், எம்.எல்.ஏ. ஆகியோர் உரையாற்றுகின்றனர். நாளை புரசைவாக்கம் (தானா தெரு)-பொருளாளர் துரைமுருகன், திருவொற்றியூர்- நடிகர் ராதா ரவி ஆகியோரு கண்டன உரையாற்றுகின்றனர். இதே போல மாநிலம் முழுவதும் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்போர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது




