பிரபல சீரியல் நடிகை நீரு பாத்ரூமில் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் மும்பை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹிந்தியில் ஏ ஹை மொஹப்பதைன் சீரியலில் நடித்து பிரபலமானவர் நீரு அகர்வால். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்த நீரு, திருமணமாகி 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், நீரு கடந்த சில தினங்களாக காய்ச்சல் கண்டு பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்துள்ளார். இதனிடையே, காலை பாத்ரூமுக்கு சென்ற நீரு அங்கேயே மயக்கம் போட்டுள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் நீருவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே நீருவின் உயிர் பிரிந்தது.
நீருவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.




