இலங்கை கடலில் மிதப்பது தமிழகளின் சடலங்களா ?

 

இலங்கையின் கிழக்கு திருகோணமலை கடலில் 10 மைல்களுக்கு அப்பால் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக உள்ளுர் மீனவர்கள் திருகோணமலை துறைமுக காவல் துறையினருக்கு 05-11-2015 அன்று தகவல் தெரிவித்துள்ளனர்.

கடற்பரப்பில் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களையடுத்து அந்நாட்டு கடற்படை அப்பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் தீவர தேடுதலில் ஈடுபட்டனர் .

இந்த தீவர தேடுதலில் ஒரு சடலம் மீட்கப்பட்டது. இலங்கை கடற்படைனரால் மீட்கப்பட்டவரின் சட்டைப் பையிலிருந்து சென்னை முகவரியிடப்பட்ட வாடகைக் கார் ஓட்டுநர் அடையாள அட்டை இருந்தது.அந்த சடலம் தற்போது திருகோணமலை இலங்கை அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள இராமேஸ்வரம் மீனவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்களை இலங்கை அரசு அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் திருகோணமலை நிலாவெளி கடலோரம் இந்தியப் பிரஜை என சந்தேகிக்கப்படும் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கை கடற்படையினர் மூன்று டோரா படகுகள் தற்போது அந்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை வேறு சடலங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என இலங்கை கடற்படையின் ஊடகதுறை பிரிவு கூறுகிறது.கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டாலும்

தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இலங்கை கடற்படை வாட்டாரம் தெரிவிப்பதாக செய்தி ஏஜென்சி தகவல் கூறுகிறது.