விஜயதாரணி அதிமுகவுக்கு தாவ போகிறாரா ?

சற்றுமுன்
 
காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டு அந்த பதவிக்கு எம்.ஜான்ஸிராணி நியமிக்க பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிரடியாக அறிவித்தது.
 
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு விஜயதரணி நீக்கத்தின் பின்னணியில் இருப்பதாக விஜயதாரணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, இன்று விஜயதாரணி சட்டமன்ற வளாகத்தில் கூட்டத்தொடர் முடிந்த பிறகு சந்தித்துப் பேசினார்.
 
அதன் பின்னர் விஜயதாரணி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். தவறு செய்த இளங்கோவனை விட்டு விட்டு என் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது பற்றி கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இணைவேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.