சென்னை: தாமிரபரணி புஷ்கர விழாவின் போது, நெல்லை குறுக்குத்துறை மற்றும் தைப்பூச மண்டப படித் துறையில் பக்தர்கள் புனித நீராட நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆற்றின் ஆழம் மற்றும் தண்ணீரின் அளவைப் பொறுத்து 2 இடங்களிலும் நீராட அதிகாரிகள் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் இது தொடர்பாக தொடரப் பட்ட வழக்கை முடித்து வைத்தது.
இதனிடையே, தாமிரபரணி ஆற்றில் வரும் வெள்ளத்தைப் பொறுத்து, இரு படித்துறைகளிலும் நீராடுவதற்கு அனுமதிப்பதாக ஆட்சியரும் அறிவித்தார். இதை அடுத்து, இரு படித்துறைகளிலும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.




