சென்னை: #MeToo மூலம் என்னைப் பற்றி துரதிர்ஷ்டவசமாக அவதூறான தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னைப் பற்றி வெளியிடப்பட்ட அவதூறு செய்திகளை நான் உறுதியாக மறுக்கின்றேன்!
எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவதூறாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன… என்று பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
இதன்மூலம், சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து இன்னமும் மறுப்பு எதுவும் தெரிவிக்காத நிலையில், பிராமண சங்கத் தலைவர் நாராயணன் மறுப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




